Subscribe Us

உலககிண்ண போட்டி முதல் சுற்றிலேயே இங்கிலாந்து அணி வெளியேற்றம்....

-Razana Manaf-


கிரிக்கெட்டை யார் உருவாக்கி இந்த உலகத்திற்கு தந்தார்களோ அவர்களையே உலக கிண்ண தொடரில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது ஒரு கத்துக்குட்டி அணி..

நேற்றைய போட்டியை போன்று மிகவும் திரில்லிங்கான ஒரு போட்டியை இன்று காணக்கிடைத்தது.. இங்கிலாந்தின் வெளியேற்றத்துடன் இலங்கையின் காலிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு விட்டது..

பங்களாதேஷ் அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்தால் அது இந்தியாவிற்கு இன்னும் வசதியாக போய்விடும்..

பங்களாதேஷ் அணியின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டிக்கு முதுகெலும்பாக இருந்தவர் அந்த அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க அவர்கள்தான்..

அத்தனை பெருமையும் பாராட்டுக்களும் அவருக்கே சென்று சேரவேண்டும்..
நாமும் பெருமைப்படுகின்றோம் அவர் எமது நாட்டை சேர்ந்த ஒருவர் என்பதனால்.

இன்றைய போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 275 ஓட்டங்கள் பெற்ற அதேவேளை பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியால் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 260 ஓட்டங்களை மட்டுமே பெற முடித்தது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments