மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
கொழும்பு புறக்கோட்டை முதல் காலி வீதி நெடுகிலும் உள்ள வர்த்தகர்களை மாத்திரமன்றி நாட்டின் ஏனைய நகர்களிலும், ஊர்களிலும் உள்ள வர்த்தகர்களை, தொழில் அதிபர்களை அல்லது அவர்களில் கணிசமானவர்களை சந்தித்து ஒரு ஆய்வினை பல்கலைக் மாணவர் சமூகம் செய்தல் சிறந்தது.
பல தொழில் அதிபர்கள் ஆறாம் வகுப்பு எட்டாம் வகுப்பு படித்துவிட்டு குடும்ப சுமைகள் வறுமை காரணமாக முப்பது, ஐம்பது ரூபாய்களுடன் கொழும்பு வந்து கூலி வேலைகள் செய்து, படிப்படியாக சிறு தொழில் முயற்சிகளை ஆரம்பித்து முன்னுக்கு வந்ததாக சொல்கின்றார்கள்.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, வர்த்தக பயிர்ச் செய்கை நடவடிக்கைகள், சில்லறை, மொத்த வியாபாரம், சுய தொழில்கள், கைத்தொழில் முயற்சிகள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், கூட்டுறவு தொழில் முயற்சிகள், கொவனவு, சந்தைப்படுத்தல், அசையும் அசையா சொத்துக்களை வங்கி விற்றல், அல்லது தரகு சேவைகளை வழங்குதல், இவ்வாறு இன்னோரன்ன துறைகளில் சாதாரண, உயர்தரம் மற்றும் உயர்கல்வி கற்ற மாணவர்கள் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? எனற விடயம் ஆய்வுக்கு உற்படுத்தப் படல் வேண்டும்!
பொதுவாக படித்தவர்கள் பட்டதாரிகள் ஒரு அரச தொழிலை, அல்லது தனியார் நிறுவனத்தில் ஒரு தொழிலை பெற்று மாத வருமானம் ஒன்றையே நம்பி வாழ்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்! பின்னர் மேலே குறிப்பிடப்பட்ட தொழில் அதிபர்களிடம் ஊழியர்களாக மாறுவதில் அக்கறை காட்டுகின்றனர்.
மத்திய கிழக்கை நோக்கி படை எடுத்து சொந்த நாட்டில் சொந்த வீட்டில் மேற்கொள்ளாத அளவு உழைத்து ஊத்கியம் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றோம் எதோ ஒரு கற்கையை நிறைவு செய்து விட்டு அந்த நாடுகளுக்கு சென்று வாழ்வை இழந்து தவிக்கின்றோம்!
இவ்வாறு இன்னோரன்ன அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் நம் பெறும் ஊதியங்கள் வாழ்வின் அடிப்படைத் தேவைகளை ஈடு செய்து கொள்ள போதுமானவைகளாக இல்லை, ஒரு வீடு , ஒரு வாகனம், திருமணம் ,குடும்ப வாழ்வு, குடும்ப பொறுப்புக்கள் என பல்வேறு பொருளாதார போராட்டங்களில் தன்னிறைவு காண முடியாத நிலையினையே ஏற்படுத்தியுள்ளன.
உதாரணமாக விவசாய கற்கைகளை நிறைவு செய்த ஒரு பட்டதாரி விரிவுரையாளர் பொது போக்குவரத்திற்காக காத்திருக்க விவசாயம் செய்யும் அவரது நண்பர் ஒருவர் தொழில் அதிபராக இருப்பதுவும் அதி சொகுசு வாய்ந்த வண்டியை நிறுத்தி அவரை அழைத்துச் செல்லும் ஒரு நிலை குறித்து கற்பனை செய்து பாருங்கள்!
நாட்டில் எல்லோரும் தொழில் அதிபர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை மாறாக ஏன் கல்வி உயர்கல்விச் சமூகம் தொழில் அதிபர்களாக அன்றி தொழிலாளர்களாகவே இருப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதே ஆதாங்கம்!
மாடு ஆடு வளர்த்தல், விவசாயம் செய்தல் என்பதனை பண்ணை நடத்தலாக வளர்முக நாடுகளில் பாமரர்கள் மாத்திரமன்றி படித்தவர்களும் செய்கின்றார்கள்!
இதனை ஒரு ஆய்வுக்கு உரிய தலைப்பாக ஒரு சில நண்பர்கள் எடுப்பார்கள் என நம்புகின்றேன்!


0 Comments