நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்காக, இவ்வாறு அழைப்பாணை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரத உள்ளிட்ட நான்கு பேரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான குற்றப்பத்திரிகை ஏற்கனவே நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பத்து பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் தேவிகா டி லிவேரா தென்னக்கோன் உத்தரவிட்டுள்ளார்.
2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி முல்லேரியா பிரதேசத்தில் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.


0 Comments