Subscribe Us

header ads

பிரதமர் தற்காலிக அடிப்படையிலேனும் பதவி விலக வேண்டும்: டிலான் பெரேரா


பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிக அடிப்படையிலேனும் பதவி விலக வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைப்பத்திர மோசடி தொடர்பில் பிரதமர் ஆற்றிய உரையைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுனர் விடுமுறை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை பிரதமரும் ஒப்புக்கொள்கின்றார்.

இந்தப் பிரச்சினையை நிதி அமைச்சரின் தலையில் கட்ட முயற்சிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி பிரதமரின் கீழே இயங்கி வருகின்றது. எனவே பிரதமர் தற்காலிக அடிப்படையிலேனும் பதவியை விட்டு ஒதுங்கியிருக்க வேண்டும்.

விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் இவ்வாறு பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் விடுமுறையிலாவது இருக்க வேண்டும்.

மத்திய வங்கியின் ஆளுநருக்கு 24 மணித்தியாலத்தில் யார் குடியுரிமை வழங்கியது? ஏன் அவ்வாறு வழங்கப்பட்டது?

மத்திய வங்கி சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எங்களை கள்வர்கள் என ஆளும் கட்சி குற்றம் சுமத்துகின்றது. நாம் கள்வர்கள் என்றால் அவர்கள் பாரிய கொள்ளையர்களாகும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments