இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு பின்னர் ஆட்சியில் இருக்க எந்த அரசாங்கத்துக்கும் வழியில்லை என பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் அஜித் பி பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
எனவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அதன்பின்னர் காபந்து அரசாங்கமே ஆட்சியில் இருக்கும்.
இந்தக்காலக்கட்டத்துக்குள் அரசியல் அமைப்பில் திருத்தம் மற்றும் தேர்தல் முறையில் மாற்றம் என்பவற்றை செய்துவிட முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றங்கள் யாவும் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்றுக்காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
0 Comments