இந்திய அணியின் விராட் கோலியைவிட இலங்கையின் குமார்
சங்கக்காரவை பார்த்துத்தான் எதிரணிகள் பயப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள்
சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முத்தையா முரளிதரன் மேலும் தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்காவின் டி வில்லியர்ஸ், அவுஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லை விடவும் குமார் சங்கக்காரதான் ஆபத்தான துடுப்பாட்ட வீரர்.
அவுஸ்திரேலிய அணியுடன் இலங்கை தோல்வியடைந்திருந்தாலும் அதன் ஆட்டத்திறன் சிறப்பாக இருந்தது.
இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் அதிக ஓட்டங்களை வாரிக் கொடுத்திருந்தாலும், துடுப்பாட்ட வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
40 ஆவது ஓவர்கள் வரை, அவுஸ்திரேலிய அணியை அச்சுறுத்தியபடியே இலங்கை அணி இருந்தது.
குமார் சங்ககாராதான் தற்போது, உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன். விராட் கோலி, டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் பற்றி என்னதான் பெருமையாக பேசினாலும், தற்போதைய டொப் பேட்ஸ்மேன் சங்ககாராதான்.
ஏனைய வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தாலும், ஒரு வீரரை பார்த்து பிற அணிகள் அச்சப்படுகின்றன என்றால், அது சங்ககாராவை பார்த்துதான் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலகக் கிண்ண போட்டியில் சங்கக்கார அடுத்தடுத்து 3 போட்டிகளில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை சங்ககாரா பெற்றுள்ளார்.
உலகக் கிண்ண போட்டியில் தொடர்ந்து மூன்று சதங்களை அடிப்பது சாதாரண விடயம் கிடையாது. அதிலும், பந்துக்கு ஏற்ப ஓட்டங்களை சேர்ப்பது மிகவும் சிரமம். அதை சங்ககாரா சாதித்து காண்பித்துள்ளார்.

0 Comments