Subscribe Us

header ads

ஒபாமாவுக்கு கூட இல்லாத சலுகைகள் மகிந்தவுக்கு: நிதி அமைச்சர்


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கூட இல்லாத சலுகைகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெற்றுக் கொள்ளத் தீர்மானித்திருந்ததாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
பராக் ஒபாமாவிற்கு இல்லாத சொகுசு விமானத்தை மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொள்ள தீர்மானித்திருந்ததாக ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
அதிக விலையுடைய விமானங்களுக்காக உத்தியோகபூர்வ விலையை விட 25% அதிக பணம் செலுத்தி வாங்கியுள்ளதாகவும், அவ்வாறான 18 விமானங்களை வாங்கியுள்ளதாகவும், எனினும் குறித்த விமானங்களை கொண்டு வந்து நிறுத்துவதற்கான வசதிகள் இல்லாமையினால் இலங்கைக்கு கொண்டு வரவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments