Subscribe Us

header ads

மு.கா கட்சிக்கு தேசிய நீர்வழங்கல் சபை,மின்சார சபை இரண்டிலும் வேலை வாய்ப்புக்களினை வழங்கக் கூடிய சந்தர்ப்பம்



மு.கா கட்சிக்கு தேசிய நீர்வழங்கல் சபை,மின்சார சபை இரண்டிலும் வேலை வாய்ப்புக்களினை வழங்கக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் இவ்வாறு தங்களுக்கு வழங்க முடியுமான தொழில் வாய்ப்புக்களை இலங்கை பூராகவும் பகிர்ந்தளிக்க கட்சி தலைமை தீர்மானித்து தங்களது முக்கிய உறுப்பினர்களிடம் பெயர் விபரங்களை கேட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இது நல்ல விடயமாக இருப்பினும் மு.கா போராளிகளிடையே இத் தொழில் வாய்ப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது.

ஏனெனில்,வழங்கப்படும் தொழில் வாய்ப்புக்களில் சிலவை குறித்த உறுப்பினர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.எஞ்சியவை பணத்திற்கு விலை போகும்.
அப்படியானால் கட்சியின் வளர்ச்சிக்காய் தன்னை அர்ப்பணித்த போராளிகள் என்ன செய்வது? மு.கா இற்கு உழைத்துவிட்டு இன்னுமொரு கட்சியிடம் வேலை கேட்டு செல்ல முடியுமா? இல்லை சென்றால் தான் கொடுப்பானா?

"பணத்தினை வாங்கிக் கொண்டு தொழிலை வழங்குறான்" என்ற செய்தி மக்களிடையே வெளிப்படாமல் இருக்க அண்மையில் மு.கா உறுப்பினர்கள் சிலர் தங்களால் வழங்க முடியுமான தொழில்களை தனது ஊரிற்கு வழங்காமல் வேறு ஊரிற்கு வழங்கல்,தான் தேர்தல் கேட்கும் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களை தவிர்த்து வேற்று மதத்தவர்களுக்கு வழங்கல் போன்ற செயற்பாடுகள் செய்து மு.கா ஆதாரவாளர்களிடையே மனக் கசப்பினையும்,வெறுப்பினையும் ஏற்படுத்தி இருந்தார்கள்.

இதை விடக் கேவலமானது துரோகத்தனமான செயற்பாடு எதுவும் இல்லை.

எது எவ்வாறு இருப்பினும் காசு கொடுத்தாவது தொழில் கிடைக்க மாட்டாதா? என காத்திருக்கும் எம்மவர்களிடையே பணத்தினை வாங்கிக் கொண்டாவது தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுமா?

எனவே,தலமை இது விடயத்தில் அதீத கரிசனை கொள்ள வேண்டும்.இவ்வாறான செயற்பாடுகள் மேலும் மேலும் அரங்கேறினால் மு.கா கட்சியின் நிலை அவ்வளவுதான்.

-Thuraiyoor Misbavul Haq-

Post a Comment

0 Comments