Subscribe Us

header ads

தாயின் கடுமையான எதிர்ப்பை மீறி அமெரிக்காவின் பிரபல பாடகி நிக்கோலா ரிச்சி இஸ்லாத்தில் இணைந்தார்..!!

நிக்கோலோ ரிச்சி அமெரிக்காவின் பிரபல பாடகியாவார். அண்மையில் இவர் இஸ்லாத்தில் இணைந்தார். அவர் இஸ்லாத்தில் இணைந்தற்கான காரணத்தை தனது பேட்டியில் விளக்கியுள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தகற்ப்பிற்கு பிறகு அமெரிக்க மீடியாக்கள் மட்டும் இன்றி உலக மீடியாக்கள் அனைத்துமே இஸ்லாத்தை தீவிரவாதமாகவும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்தரித்து காட்டியது. இதன் காரணமாக இஸ்லாத்தை ஆராய தொடங்கினேன்.

இஸ்லாத்தை ஆராய்ந்த போது தான் மீடியாக்களின் பொய்முகத்தை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. மனித நேயத்தை அடிப்டையாக கொண்டு அமைந்துள்ள ஒரு மார்க்கத்தில் எப்படி இந்த மீடியாக்களால் தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்த முடிகிறது என எண்ணி வருந்தினேன்

மனிதாபிமானமும் சகிப்பு தன்மையும் சகோதரத்துவ உணர்வும் நிறைந்த மார்க்கமாக இஸ்லாத்தை நான் கண்டதால் என்னை நான் இஸ்லாத்தில் இணைத்து கொள்ள முடிவெடுத்தேன்.

தாம் இஸ்லாத்தை ஆராய்ந்ததாகவும் அது உண்மை என்பதை அறிந்து கொண்டதாகவும் அதனால் அந்த மார்க்கத்தில் தன்னை இணைத்து கொள்ள போவதாகவும் தனது குடும்பத்திடம் தெரிவித்தார். இதை அவரது தாய் கடுமையாக எதிர்த்தார்.

தாயின் எதிர்பையும் மீறி தன்னை அவர் இஸ்லாத்தில் இணைத்து கொண்டு தனது இசை தொழிலுக்கும் விடை கொடுத்து ஹிஜாபுடன் தன்னை ஒரு முஸ்லிம் பெண்ணாக மாற்றி கொண்டு விட்டார் நிக்கோலா ரிச்சி.

தனது பெயரையும் ஆயிதா என்று மாற்றி கொண்டு விட்டார். அமெரிக்காவில் இருந்து வெளியேறி புனித தலமான மக்கா மதினாவை அடுத்திருக்கும் பகுதிகளில் தான் வாழ விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.-MM-

Post a Comment

0 Comments