முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் முகப்புத்தக பக்கங்கள், சைபர் தாக்குதல்களால் முடக்கப்பட்டுள்ளதாக, பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது. உதய கம்மன்பிலவின் முகப்புத்தக பக்கத்துக்கான விருப்புகள், கடந்த வெள்ளிக்கிழமை 7 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் 1,200 ஆல் குறைவடைந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் முகப்புத்தக பக்கங்களையும் சோதனை செய்தோம். இதன்பிரகாரம் முன்னாள் ஜனாதிபதியின் முகப்புத்தக விருப்பங்;களில் 15,800 உம், நாடாளுமன்ற உறுப்பினரின் முகப்புத்தக விருப்பங்களில் 4,100உம் குறைந்திருந்தன. முகப்புத்தகத்தில் விருப்புகள் அதிகரிப்பது குறைவதும் பொதுவான விடயமாகும். ஆனால், ஒரே நேரத்தில் பெருமளவான விருப்புகள் கடுமையாக குறைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படும் என்று பிவிதுரு ஹெல உறுமய குறிப்பிட்டது.
மேலும், இணையத்தளத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி, இந்த 3 அரசியல் வாதிகளின் அரசியலை வீழ்த்தச்செய்யும் இந்த சதி வேலைக்கு எதிர்க்கட்சியே காரணமாக இருக்கலாம் என்றும் பிவிதுரு ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில் சமூக வலையில் எவ்வாறு இது நடந்தது என வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக இந்தப்பதிவு இங்கு பிரசுரிக்கபடுகிறது.
இம்மாதம் ஐந்தாம் திகதி முதல் பாவனையில் இல்லாத பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட உள்ளதாக பேஸ்புக் அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்ததே.
அதன்படி இலட்சக்கணக்கான பாவனையில் இல்லாத பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. குறிப்பாக பல முகநூல் பக்கங்கள் போலியாக லைக் பெறும் இருந்தன.
இவ்வாறு பாவனையில் இல்லாத பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டதால் குறிப்பிட்ட பக்கங்களை ஏற்கனவே லைக் செய்து இருந்தவர்களின் கணக்குகள் நீக்கப்பட பல பேஸ்புக் பக்கங்களில் லைக் கள் குறைந்தன.
இவ்வாறே மேல் குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் பக்கங்களிலும் லைக் கள் குறைந்துள்ளன. மற்றபடி சைபர் தாக்குதல் அல்ல.


0 Comments