Subscribe Us

header ads

அமைச்சர் ராஜித மீது ஒழுங்காற்று நடவடிக்கை வேண்டும்: சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்


சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிடம் மேல்மாகாண சபையின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கண்டியில் இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கட்சியை உடைத்து ராஜித சேனாரட்ன வெளியேறியமை காரணமாக தாம் கண்டி கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்தது.

எனவே ராஜிதவின் மீதே ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மேல்மாகாண சபை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளனர்.

Post a Comment

0 Comments