Subscribe Us

header ads

வாக்குச் சாவடிகளில் குழப்பங்களை விளைவிப்போரை சுடுவதில் பிழையில்லை: தேர்தல் ஆணையாளர்


தேர்தலில் கணனி மோசடி என்பது ஓர் மாயை மட்டுமே என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சட்டக் கல்லூரி மாணவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் கணனி மோசடி என்பதே 100 வீதமான மாயையாகும். திரட்டப்பட்ட தகவல்கள் வெளியிடங்களுக்கும் வழங்கப்படுகின்றன.
கணனியை நாம் ஓர் எண்ணிக்கைகளை கூட்டும் ஓர் கருவியாகவே பயன்படுத்துகின்றோம்.
கடந்த தேர்தலில் எதற்கும் அஞ்சாமல் மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய நான் செயற்பட்டேன். நாட்டில் தேர்தல்கள் சுயாதீனமாக நடைபெறவில்லை என்ற நிலைப்பாடு காணப்பட்டது.
யார் வெற்றியீட்டினாலும் தோற்றாலும் மக்கள் சுயாதீனமாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அண்மையில் பிரதமர் ஓர் கருத்தை வெளியிட்டிருந்தார்.
வீட்டுக்கு அத்துமீறி பிரவேசிக்கும் ஒருவரை சுட முடியும் எனவும் தற்பாதுகாப்பு நோக்கில் சுட்டுக் கொலை செய்ய முடியும் எனவும்.
சட்டங்கள் எங்கு இயற்றப்படுகின்றன? நாடாளுமன்றில். நாடாளுமன்றம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது, தேர்தல் ஊடாகவே நாடாளுமன்றம் உருவாக்கப்படுகின்றது.
எனவே வாக்குச் சாவடிகளில் குழப்பங்களை விளைவிப்போரை சுட்டால் ஒன்றும் பிழையில்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments