Subscribe Us

header ads

கோத்தபாயவை கைது செய்ய வேண்டுமென தீர்மானிக்கவில்லை!– அனுரகுமார திஸாநாயக்க


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய வேண்டுமென தீர்மானிக்கவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாருடைய தலையில் தோன்றும் கற்பனைகளை தேசிய நிறைவேற்றுப் பேரவையின் தீர்மானங்களாக அறிவிப்பது மிகவும் மோசமான குற்றமாகும்.

கோத்தபாய ராஜபக்ச அல்லது வேறும் யாரையும் கைது செய்ய வேண்டுமென தேசிய நிறைவேற்றுப் பேரவையில் தீர்மானிக்கவில்லை.

தேசிய நிறைவேற்றுப் பேரவை ஓர் அரசியல் அமைப்பாகும்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மட்டுமன்றி சாதாரண பிரஜை ஒருவரை கைது செய்யுமாறு தீர்மானிக்கும் சட்ட ரீதியான அதிகாரம் கூட தேசிய நிறைவேற்றுப் பேரவைக்கு கிடையாது.

அவ்வாறான கைதுகள் கடந்த காலங்களில் நடைபெற்ற போதிலும், தற்போதைய ஆட்சியில் அவ்வாறான கைதுகள் இடம்பெறுவதனை அனுமதிக்க முடியாது.

அரசியல் அமைப்பு ரீதியான நிறுவனங்களின் ஊடாகவே கைதுகள்  மேற்கொள்ளப்பட வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கோத்தபாய கைது தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று தொலைபேசி மூலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments