சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL) நிறுவனத்தின் முன்னணி வர்த்தகநாமமான மஞ்சி, அண்மையில் மஞ்சி பேபி ரஸ்க்ஸ் எனும் புதிய தயாரிப்பினை அறிமுகம் செய்துள்ளது.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு முறையை ஆரம்பிக்க உதவும் வகையிலும் விசேடமாக தாய்மார்களுக்கு நம்பகமான ஊட்டச்சத்து ஆகாரத்தை அறிமுகப்படுத்தும் வகையிலும் இத் தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்து குறைந்தபட்சம் ஆறு மாதம் பூர்த்தியடையும் வரை கட்டாயம் தாய்ப்பாலூட்டுதல் வேண்டும். அதன் பின்னர் குழந்தைகளின் அதிகரிக்கும் ஊட்டச்சத்து தேவையை தாய்ப்பாலிலிருந்து மாத்திரம் பூர்த்தி செய்வது முடியாத காரியமாகும்.
ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க மேலதிக உணவுகளை அறிமுகப்படுத்தி குழந்தைக்கு தேவையான பெரிய மற்றும் நுண் போசணைகள் கிடைக்கின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டியமை முக்கியமாகும்.
UNICEF அமைப்புக்கமைய, ஆறு மாதத்திற்கு பின்னர் குழந்தைக்கு வழங்கப்படும் தாய்ப்பால் அல்லாத ஏதேனும் உணவுகள் அல்லது ஊட்டச்சத்து திரவங்கள் மேலதிக உணவாக கருதப்படுகிறது.
சோறு, பழங்கள், காய்கறிகள், மீன், இறைச்சி மற்றும் பதப்படுத்திய சீரியல்கள் மேலதிக உணவுகளுக்கான சில உதாரணங்களாகும். CBL ரஸ்க்ஸ் தயாரிப்பும் ஓர் மேலதிக உணவாகும்.
இருப்பினும், குழந்தைகளுக்கான பாதுகாப்பான மாற்றீட்டு உணவினை தேர்ந்தெடுப்பது என்பது சவால் நிறைந்த விடயமாகும். இது ஓர் மேலதிக உணவாக குழந்தைகள் உணவினை மெல்லுவதையும், கடிப்பதையும் ஊக்குவிக்கிறது. குழந்தையின் வாழ்க்கைமுறையில் ஆரோக்கியமான உணவு உண்ணல் பழக்கத்தின் ஆரம்ப விருத்திக்கு சரியான கலவையின் சுவை, அமைப்பு மற்றும் ஊட்டச்சத்தினை கண்டறிதல் மிக முக்கியமாகும்.
“மஞ்சி பேபி ரஸ்க்ஸ் அறிமுகமானது எமது வர்த்தகநாமத்தின் விரிவாக்கமாக அமைந்துள்ளது” என சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைவரும், குழுமப் பணிப்பாளருமான நந்தன விதானகே தெரிவித்தார்.
“ஆரோக்கியமான உணவு உண்ணல் முறைக்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் வகையில் ஆரோக்கியமான திட உணவுகளை அறிமுகம் செய்து சிறு குழந்தைகள் மற்றும் இளம் பிள்ளைகள் மத்தியில் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை மேம்படுத்துவதற்கான எமது ஈடுபாட்டினை விருத்தி செய்து வருகிறோம்” என மேலும் தெரிவித்தார்.
செயற்கை வர்ணங்கள், சுவையூட்டிகள், உப்பு அல்லது அதிக நாட்கள் பேணி வைப்பதற்கான சேர்மானங்கள் எதுவும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டுள்ள மஞ்சி பேபி ரஸ்க்ஸ் தயாரிப்பு ஆரோக்கியம் நிறைந்தது.
பேபி ரஸ்க்ஸ் தயாரிப்பில் 11 விற்றமின்கள் மற்றும் DHA உடன் 7 கனியுப்புகள் உள்ளடங்கியுள்ளன. மஞ்சி பேபி ரஸ்க்ஸ் என்பது பதப்படுத்திய தானியங்கள் அடிப்படையிலான மேலதிக உணவாகவுள்ளதுடன், இதனை 6 மாதத்திலிருந்து 36 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு வழங்க முடியும்.
மஞ்சி பேபி ரஸ்க்ஸ் தயாரிப்பின் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த CBL இன் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் தேஜா பீரிஸ்,
“தரம் அல்லது போசாக்கு குறையாது, சிறந்த மூலப்பொருட்களை கொண்டு உள்நாட்டில் தயாரி;க்கப்பட்ட மாற்றீட்டினை பெற்றோருக்கு வழங்குவதே எமது மஞ்சி பேபி ரஸ்க் அறிமுகத்தின் குறிக்கோளாக அமைந்துள்ளது.
ஆரோக்கியமான திட ஆகாரத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு சிறந்த வழிமுறையாக மஞ்சி பேபி ரஸ்க்ஸ் அமைந்துள்ளது” என்றார்.
CBL இன் மஞ்சி பேபி ரஸ்க்ஸ் தயாரிப்பின் அறிமுகத்திற்கு முன்னதாக ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய இயந்திரங்கள் மூலம் ஆராய்ச்சி மற்றும் கடுமையான தர பரிசோதனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
மஞ்சி பேபி ரஸ்க்ஸ் தயாரிப்பானது CODEX சர்வதேச தர கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பான பொதியிடல் முறைகளை கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO)ஆகியன இணைந்து ஸ்தாபித்த உணவு, உணவுத் தயாரிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பிலான சர்வதேச தரங்கள் மற்றும் வழிகாட்டல்களை கொண்ட சேகரிப்பே CODEX ஆகும்.
இதற்கு மேலதிகமாக, பேபி ரஸ்க்ஸ் உற்பத்தி செயற்பாடானது அதன் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பினை உறுதிபடுத்தும் வகையில் அர்ப்பணிக்கப்பட்ட தொழிற்சாலை மூலம் இடம்பெறுகிறது. புதிய மஞ்சி பேபி ரஸ்க்ஸ் தயாரிப்பானது தாய்மார்களுக்கு சகாயமான விலையில் சர்வதேச தரம் வாய்ந்த தயாரிப்பை வழங்குகிறது.
0 Comments