விடுதலைப் புலிகள் இயக்கத்தின், கடற் புலிகளின் பெண்கள் பிரிவின்
முன்னாள் தலைவியொருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரான்ஸ் நாட்டுக்கு தப்பிச் செல்ல வந்த வேளையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று கைதுசெய்யப்பட்ட இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் 1997 முதல் 2000 ஆம் ஆண்டு வரை கடற் புலிகளின் பெண்கள்
பிரிவின் தலைவியாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
0 Comments