Subscribe Us

header ads

கற்பிட்டியில் தடைசெய்யப்பட்ட வலைகளை பாவித்த 24 மீனவர்கள் கைது

-எம்.எஸ்.முஸப்பிர்-
 
தடைசெய்யப்பட்டுள்ள சுருக்குவலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 24 மீனவர்கள்  கற்பிட்டி வடக்குப் பகுதியில் சிலாவத்துறை கடல் எல்லையில் நேற்று திங்கட்கிழமை கற்பிட்டி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக புத்தளம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

இந்த மீனவர்களிடமிருந்து இரண்டு சுருக்குவலைகள் மற்றும்  ஐந்து படகுககள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். கைப்பற்றப்பட்ட சுருக்குவலைகள் மற்றும் படகுகளுடன் இந்த மீனவர்கள்,  புத்தளம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments