உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளை தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி புரிந்து சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம் என்று உலக வரலாற்றில் இடம் பிடித்த கிறித்தவ நாடான இங்கிலாந்தில் இஸ்லாம் வீறுகொண்டு எழுந்துள்ளது.
இறைவனின் மாபெரும் கிருபையினால் இங்கிலாந்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்து வருகிறது.
இங்கிலாந்திலுள்ள கிறித்தவ மக்களின் நம்பிக்கை குறைந்து ஒரு சாரார் நாத்திகர்களாகவும், மற்றொரு சாரார் இஸ்லாத்தை நோக்கியும் செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கிறித்தவ மதத்தின் மீதான நம்பிக்கை குறைந்து பூட்டப்பட்ட ஆலயத்தினை இஸ்லாமியர்கள் வாடகைக்கு எடுத்து பள்ளிவாசல்களாக நடத்தி வருகிறார்கள்.
மக்காவில் பிறந்து மதினாவில் இறந்து விட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு வாழ்நாளில் ஒருமுறை கூட சென்றதில்லை,
ஆனால் அவர்கள் விட்டு சென்ற இஸ்லாம் இங்கிலாந்தில் நுழைந்ததும், ஐரோப்பிய மக்களின் மனதில் நிலைத்து வருவதற்கும் ஐரோப்பிய மக்கள் இஸ்லாத்தை திடமாக ஆய்வு செய்வதேயாகும்.
அமைதி மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தை தீவிரவாத மார்க்கமாக உலகளாவிய யூத மீடியாக்கள் செய்யும் அனைத்து அவதூறு பிரச்சாரத்தையும் அப்படியே நம்பி விடாமல் இறை வேதமான திருக்குர்ஆனை ஆய்வு செய்து ஐரோப்பிய மக்கள் கூட்டம் கூட்டமாக, சாரை சாரையாக இஸ்லாத்தை நோக்கி அணிவகுத்து வருகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களே....
என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் அதை பிறருக்கு எத்தி வையுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களே...
அவர்களின் வார்த்தையை எத்தி வைக்கும் விதமாக இஸ்லாமிய அழைப்பு பிரச்சாரத்தை ஆண்களுக்கு இணையாக இங்கிலாந்தை சேர்ந்த இஸ்லாமிய சகோதரிகளும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....


0 Comments