Subscribe Us

header ads

கொள்ளையர்கள் பற்றிய தகவல்களுடன் ஜனாதிபதியை சந்திக்கும் ஜே.வி.பி

ஜே.வி.பி முந்தைய அரசாங்கத்தின் திருடர்கள் பற்றியும் நடந்த ஊழல், மோசடிகள் தொடர்பாகவும் சகல விபரங்களும் அடங்கிய கோப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க உள்ளது.

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இவற்றை அவரிடம் கையளிக்க உள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பாரியளவில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட 13 பேருக்கு எதிராக ஜே.வி.பி சாட்சியங்களுடன் இலஞ்ச,ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் விபரங்களுடன் முறைப்பாடு செய்துள்ளது.

ஜே.வி.பியின் உறுப்பினரான வசந்த சமரசிங்க, இது சம்பந்தமாக ஆணைக்குழுவில் 20 மணிநேரம் சாட்சியமளித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், விசாரணைகள் தாமதமாகி வருவதும், சந்தேக நபர்களுக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால், ஜே.வி.பி கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகிறது.

Post a Comment

0 Comments