முன்னாள் மஹிந்த ராஜபக்ஸ மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைவர் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட தகுதியற்றவர். கடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
வேறு எந்தவொரு தலைவரும் இவ்வாறான தோல்வியை எதிர்நோக்கியதில்லை.
அபிவிருத்தித் திட்டங்கள் ஒட்டுமொத்த அடிப்படையில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடம் தேர்தலுக்காக பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.
கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு மந்த கதியில் இயங்கி வந்தாலும் தற்போது சற்று வேகமாக செயற்பட ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதியும், பிரதமரும் ஏனைய அமைச்சர்களும் இன்னமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமானது என நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


0 Comments