எவென்ட் காட் ஆயுதக்களஞ்சியம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்படுகின்றபோதும் தாம் சட்டத்தின் அடிப்படையிலேயே செயற்பட்டதாக
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எந்த விடயத்தையும் தாம் சட்டரீதியற்ற வகையில் மேற்கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தவிடயம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸாரிடம் வாக்குமூலத்தை வழங்கிவிட்டதாக
குறிப்பிட்ட அவர், விசாரணைகள் முடிவடையும் முன்னர் தமது கடவுச்சீட்டை
முடக்கியமை ஏற்றுக்கொள்ளதக்க செயலல்ல என்று தெரிவித்துள்ளார்.
தம்மை திருடர்களாகவோ, கொலைகாரர்களாகவோ உலகுக்கு காட்ட முயற்சித்தாலும்
தாம் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும் கோத்தபாய
குறிப்பிட்டுள்ளார்.
தமது கீர்த்திக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்திலும் சில அதிகாரிகள் செயற்படுவதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.


0 Comments