Subscribe Us

header ads

'இவர்களிடமிருந்து அரசியல்வாதிகள், பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்'


இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹல ஜயவர்தனவிடமிருந்து சில அரசியல்வாதிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தெலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குமார் சங்கக்காரவும் மஹல ஜயவர்தனவும் திறமைகள் உச்ச கட்டத்தில் இருந்த போது ஓய்வு பெற்றுக்கொள்ளத் தீர்மானத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு வீரர்களின் ஓய்வு சில அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடத்தை புகட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியைத் தழுவிய போதிலும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள எத்தனிக்கும் அரசியல்வாதிகள் இந்த விளையாட்டு வீரர்களின் தீர்மானத்தை முன்னுதாரணமாக கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அதிகார பேராசையினால் உழலும் அனைத்து அரசியல்வாதிகளும் குமார் சங்கக்கார மற்றும் மஹல ஜயவர்தன ஆகியோரை பார்த்து, அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments