ஏமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள மசூதி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலியாகினர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏமன் தலைநகர் சனாவின் மையப்பகுதியில் உள்ள மசூதியில் திரளான மக்கள் பிரார்த்தனைக்காக ஒன்று கூடினர். அப்போது அல்-பத்ர் மற்றும் அல்-ஹசாஹூஷ் என்ற இரண்டு மசூதிகளின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 55 பேர் உயிரிழந்ததகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments