பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் முக்கிய பிக்குகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை நேற்று காலை தியவன்னா தியத்த பூங்காவில் நடைபெற்றுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் எதிர்காலத் திட்டம் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகேவும் இக் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.
புத்தர் நரமாமிசம் சாப்பிட்டார் என தவ்ஹித் ஜமாத் இயக்கத்தினர் அறிவித்ததற்கு எதிராக பொதுபால சேனா அமைப்பு பொலிசார் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்றதன் பின்னர் பொதுபல சேனா அமைப்பினர் குறித்த இடத்தில் ஒன்றுக்கூடி கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments