கல்பிட்டி, சோத்துப்புட்டி வாடி எனும் இடத்தில் 135 பண்டைய நாணயங்களும் மற்பாண்டம் (குடத்தின் வாய்ப் பகுதி)யும் கண்டெடுக்கப்பட்டதாக கல்பிட்டி பொலிசார் தெரிவிக்கின்றனர். எம். காதர் என்பவரின் விவசாயத் தோட்டத்தில் இந் நாணயங்களையும் மற்பாண்டமும் கிடைத்துள்ளது.
இந் நாணயங்களில் பிராஹ்மி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தனது தோட்டத்தில் பண்டைய நாணயங்கள் கிடைத்தவுடன் வழங்கிய தகவலையடுத்து அவ் இடத்துக்குச் சென்ற கல்பிட்டி பொலிசார், கண்டெடுக்கப்பட்ட நாணயங்களையும் மற்பாண்டத்தையும் மேலதிக பரிசோதனைக்காக தொல்பொருளியல் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக கல்பிட்டி நிலைய பொறுப்பதிகாரி மஞ்சுல உடுமலகம கூறினார்.
-TPT-
0 Comments