புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி 8 ஆம் வகுப்பு மாணவன் எம்.எப்.எம்.பாதில் சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தேசிய ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியில் சிரேஷ்ட பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று தனக்கும், தனது பெற்றோருக்கும், தனது பாடசாலைக்கும் நற் பெயரைப் பெற்றுத் தந்துள்ளார்.
"நீர் காப்பு" எனும் தலைப்பில் இடம் பெற்ற இக்கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்காக அவருக்கான பரிசளிப்பு வைபவம் எதிர்வரும் 22 ஆம் திகதி BMICH இல் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
بارك الله فيك - ما شاء الله
-Muhsi Rahmathullah-


0 Comments