வெலிகம பதுர் அஹதியாப் பாடசாலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 மணி முதல் அறபா தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளன.
முழு நாள் நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ள இக் கொண்டாட்டங்களில்.....
* நடமாடும் தேசிய அடையாள அட்டை முகாம்
*ஹிஜாமா மருத்துவ முகாம்
*சட்டத்தரணிகள் குழுவொன்றினால் நடாத்தப்படும் இலவச சட்ட ஆலோசனைகள்
*சமூகத்திற்கு தெளிவற்ற விவகாரங்கள் பலவற்றுக்கான தெளிவு
*புத்தக விளம்பரத் தட்டுகளின் கண்காட்சி
*ஒளிப் பதிவுகள் பற்றிய நிகழ்ச்சிகள் முக்கிய இடம் பிடிக்கவுள்ளன....
மாலை 02:30 மணி முதல் அஹதிய்யாவின் பரிசளிப்பு வைபவம் இடம் பெறவுள்ளதுடன் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன.
விழா நிகழ்வுகள் அனைத்தும் www.badfoundation.com என்ற இணையத் தளத்தினூடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதுடன் நிகழ்வுகளின் FM நேரடி ஒலிபரப்பினை www.moorfm.com எனும் வானொலிச் சேவையின் ஊடாக ஒலிபரப்புச் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
(கலைமகன் பைரூஸ்)
0 Comments