Subscribe Us

header ads

மகள் அறியாமல் செய்த தவறை மன்னித்து, மகளை விடுதலை செய்யுங்கள்



சிகிரியா குன்றிலுள்ள சுவரோவியம் ஒன்றில் பெயரை கிறுக்கிய குற்றச்சாட்டில் கைதான மட்டக்களப்பு தமிழ் யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அறியாமல் தவறு செய்துவிட்டதை ஒப்புக்கொண்டுள்ள எனது மகளை மன்னித்து விடுதலை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என்று அந்த யுவதியின் தாயார் கேட்டுக்கொண்டுள்ளார்.
சக நண்பர்களுடன் பாரம்பரிய தலங்களில் ஒன்றான சிகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற மட்டக்களப்பு சித்தாண்டியை சேர்ந்த 28 வயது யுவதி, மூன்று வாரங்களுக்கு முன்னர் கைதானார்.
அவரை தம்புள்ளை நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதாக அவரது தாயார் சின்னத்தம்பி தவமணி பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா குகை யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments