Subscribe Us

header ads

கொள்ளையடிக்கப்பட்ட பணம் வெகு விரைவில் மக்களுக்கு வழங்கப்படும்: பிரதமர்


கொள்ளையடிக்கப்பட்ட பணம் வெகு விரைவில் மக்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் பணத்தைக் கொள்ளையிட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

கொள்ளையடித்தவர்களை தண்டிப்பதனை விடவும் கொள்ளையிடப்பட்ட பணத்தை மீளவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது முதன்மையானது.

இதன்மூலம் பொதுமக்கள் பணத்தை கொள்ளையிட்டவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என அர்த்தப்படாது.

அனைத்து கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும்.

அதனை விரும்பாதவர்கள் இருந்தால் அவர்களை மறந்து விட்டு ஏனையவர்களை இணைத்துக் கொண்டு இந்தப் பயணம் தொடரப்படும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து வழங்கிய மக்கள் ஆணை ஒரு போதும் துஷ்பிரயோகம் செய்யப்பட மாட்டாது.

அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.

சில அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு செய்வதற்காக தற்காலிக அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தொட்டலங்க பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அங்கத்தினர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வில் பங்கேற்ற போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை நேற்று வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments