Subscribe Us

header ads

டெல்லியில் மாணவர்களையும் பெற்றோர்களையும் 'பாஜக'வில் சேர கட்டாயப்படுத்தும் பள்ளி நிர்வாகம் !




பாஜக'வில் சேர மறுக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கட் !!


டெல்லி 'ரயான்' ஸ்கூலுக்கு 'ஷோகாஸ்' நோட்டீஸ் !!!


டெல்லியில் வசந்த் கஞ், மயூர் விஹார், ரோஹினி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பல கிளைகளை கொண்ட பிரபல 'ரயான் இண்டர்நேஷனல் ஸ்கூலில்' ஆசிரியர்களையும் பெற்றோர்களையும், படிக்கும் மாணவர்களையும் பாஜகவில் கட்டாய உறுப்பினராக்கும் முயற்சிகள் நடந்துள்ளன.

பாஜகவில் சேர மறுக்கும் ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்காமல், பாஜகவில் சேர நிர்வாகம் நிர்பந்தித்து வருகிறது.

ரயான் இண்டர்நேஷனல் பள்ளி வளாகங்களில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடந்ததை ஒப்புக்கொண்ட'ரயான்' பள்ளிகளின் நிர்வாக இயக்குனர் திருமதி 'கிரேஸ் பின்டோ' ஆசிரியர்-பெற்றோர் உள்ளிட்ட யாரையும் பாஜகவில் சேர தங்கள் பள்ளி நிர்வாகம் நிர்பந்திக்கவில்லை என்றார்.

பெற்றோர் தரப்பில் கூறும் போது : பள்ளி நிர்வாகத்தின் சார்பில் 'வாட்ஸ் அப்'பில் அனுப்பட்ட '18002662020' இலவச எண்ணில் தொடர்புக் கொண்டு பாஜகவில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், ஒவ்வொரு பெற்றோரும் கூடுதலாக 10 நபர்களை பாஜகவுக்கு அறிமுகப்படுத்துமாரும் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

பாஜகவில் சேர மறுத்து வரும் ஆசிரியர்கள் பலருக்கு இம்மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் டெல்லி அரசுக்கு எழுத்துபூர்வ புகார்கள் வந்துள்ளன.

ஒவ்வொரு மாணவர்களிடமும் 10 'உறுப்பினர் சேர்க்கை' விண்ணப்பங்களை கொடுத்தனுப்பியதாகவும் அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லி மாநில துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான 'மனீஷ் சிசோதியா' ரயான் பள்ளி நிர்வாகத்துக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்ப கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரயான் பள்ளிக்கு டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மொத்தம் 133 கிளைகள் உள்ளதாகவும் அதில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்வதாகவும் கூறப்படுகிறது.


நன்றி  : டைம்ஸ் ஆப் இந்தியா 

Post a Comment

0 Comments