தான் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் நடந்தவற்றை தற்போதுள்ள எதிர்க்கட்சிகளுக்கு நடைபெற இடமளிக்கப் போவதில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் ஜனநாயக மீறல்களுக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் ரவி கருணாநாயக்க இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்த 61 நாட்களில் நாட்டிலுள்ள மக்கள் மகிழ்ச்சியாக வாழத் தேவையான வழி புதிய அரசால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் சொத்துக்களை முன்வைக்குமாறு தான் சவால் விடுத்ததாகவும், ஆனால் தற்போதுவரை இது குறித்து எந்தவொரு பதிலும் இல்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


0 Comments