Subscribe Us

header ads

நாளை கொழும்பில் விஷேட போக்குவரத்து நடவடிக்கை



நாளை காலை கொழும்பின் சில வீதிகளில் விஷேட வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இதன்படி காலி வீதியின் வௌ்ளவத்தை, சிபோய் திரையரங்கில் இருந்து டிக்மன் சந்தி வரையான பகுதியில், கொழும்பு நோக்கி வாகனங்கள் ஒருவழிப் பாதையாக மட்டுமே பயணிக்க முடியும். 

அதேபோல், டிக்மன் சந்தியில் இருந்து டுப்ளிகேன்ஸ் வீதி, தர்மராம வீதி சந்திவரை கொழும்பில் இருந்து செல்லும் வாகனங்கள் ஒருவழியாக மட்டும் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments