-அபு ரீஹத்-
சமய கல்விப்போதனையில் உரிமை மறுக்கப்பட்ட ஒரு சமுதாயமாக இலங்கை இஸ்லாமிய சமுதாயம் தொடர்ந்தும் புறக்கனிக்கப்பட்டு வருகிறது . இதன் எதிர்வினை இஸ்லாமிய சமுகத்தை சக்திவாய்ந்த சமூதாயபோராளிகளை இழந்த ஒரு இனமாக அடையாளப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இலங்கை சமய பாடதிட்ட அட்டவணையின் பிரகாரம் இஸ்லாமிய பாடமும் உள்வாங்கப்பட்டிரிக்கும் வேலையில் அதை கற்பிற்பதற்கான இஸ்லாமிய ஆசியரியர் நியமனத்தை வழங்க மறுப்பது ஒரு சமுதாயதிற்கெதிரான மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.
1992ம் ஆண்டு முதல் பகிரங்கமாக புறக்கணிக்கபட்டு வரும் இந்நியமனத்தை பெற்று கொடுக்க திராணியற்ற தலைவர்களை இந்த சமுதாயம் பெற்றிகிறதா என்ற தவிர்க்க முடியாத கேள்வி தொடர்ந்து கொண்டேதான் இருகிறது .
இனத்துவ சிறுபான்மையிலும் சிறுபான்மையான ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் ,பண்பாட்டியல் வளர்சிக்கும் , முக்கிய காரணியாக இருக்கும் சமய கல்வியை, அதன் முன்னேறத்தை திட்டமிட்ட முறையில் தடுக்க எடுக்கபப்டும் முயற்சியாகவே இந்நியமனமறுப்பை கருதவேண்டியுள்ளது.
ஜனநாயக முதிர்சி பெற்ற நாடுகளின் வரிசையில் இலங்கையின் வகிபாகம் மிகமுக்கியமானது என்று பரப்புரை செய்யப்படும் இவ்வேளையில் இந்நியமன மருப்பின் நீட்சி இப்பரப்புரையை மீள்பார்வைக்கே உற்படுத்துகிறது .
கல்வி அமைச்சு இறுதியாக வெளியிட்ட கணிப்பீட்டின் படி மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை 10118 இதில் 856 முஸ்லிம் பாடசாலைகளாக இனங்கானப்படுள்ளது.
அதிக முஸ்லிம் அரச பாடசாலைகளை கொண்ட மாவட்டமாக அம்பாறை மாவட்டம் 148 பாடசாலைகளும் ஆக குறைந்த பாடசாலைகள் உள்ள மாவட்டமாக தலா 01 பாடசாலை கொண்ட மாவட்டங்களாக யாழ்பாணம் ,கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலைகளில் (856 பாடசாலைகளில் ) கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்ளின் எண்ணிக்கை 352.633 இந்த முஸ்லிம் பாடசாலைகளில் போதனா ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 13.050 மட்டுமே என்பது மிக கவலையோடு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.
அதாவது 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் விகிதம் என்பது மிகமோசமான போதனை முறை என்பதில் சந்தேகம் இல்லை இதே வேலை சிங்கள பாடசாலைகளில் 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டிரிகிறது .
இலங்கை போன்ற ஜனநாயக வளர்சி பெற்ற,97 வீத கல்வி அறிவு கொண்ட ஒரு நாட்டை பொறுத்த மட்டில் இது அசிங்கமான வரலாற்று பதிவாகும்.
ஒரு சமுகம் சார்ந்த பாடசாலை என்பதற்காகவே இந்த பாரபற்ச நியமனமுரை என்றால் அந்த சமுகத்தின் முக்கிய பங்காக கருத்தப்படும் சமய பாடத்தின் மீதான காழ்புணர்வும் நியமன மறுப்புவீச்சின் வேகமும் எப்படி இருக்கும் என்பதை மிக இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது .
2000 திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆசிரியர் நியமனத்தின் வெற்றிடம் இருக்கும் வேளையில் பல முயற்சிகளுக்கு பின்னர் 618 பேருக்கு நியமனம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அன்றைய அரச தரப்பால் வழங்கப்பட்டது .
அதில் முதற்கட்டமாக 2010 ம் ஆண்டு இரண்டு கட்டங்களாக பிரித்து மொத்தமாக 151 நியமனங்கள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் இன்றுவரைக்கும் எஞ்சிய 467 இஸ்லாமிய ஆசிரியர் நியமனம் என்பது வெறும் கோரிக்கைகளாக மட்டுமே அறியப்பட்டு வருகிறது.
நமது சகோதர சமுகமான தமிழ் சமுகம் மொத்த சனத்தொகையில் நம்மை விட வெறும் 3 விழுக்காடு மட்டுமே அதிகமாக இருந்தும் 2223 பாடசாலைகளை பெற்றிரிகிறார்கள் என்பது ஆச்சரியதிற்குரிய எண்ணிக்கையாகும். இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அறிவியல் அதிர்வுகள் இன்னும் ஆட்கொள்ளவில்லை என்பதையே இந்த பின்னடைவுகள் புலப்படுத்துகிறது அதன் வெளிப்பாடுதான் இந்த புறக்கணிப்பும் அதை கண்டுகொள்ளாத முஸ்லிம் அரசியல்வாதிகளின் அமைதியும் .
குறிப்பிட்ட சமூக ஆர்வலர்களும், நிறுவனக்களும் அவ்வப்போது இது பற்றி பேசினாலும் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான நியாயமான எதிர்வினை இன்றளவும் பூச்சியமாகவே காணப்படுகிறது .
இஸ்லாமிய ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில் ஆட்சி கதிரையில் மாறி மாறி இருந்த அத்துனை ஆளும் அரச தரப்பாலும் ஏற்றுகொள்ளப்பட்டு அதற்கான அனுமதிகள் அவ்வப்போது வழங்கப்பட்ட பின்பும் இந்நியமன மறுப்பு நீடிப்பதானது அநாகரிகமான புறக்கனிப்பாகும் இதை மிக அமைதியாக வேடிக்கை பார்க்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களது அமைதிக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும் .
இந்த இஸ்லாமிய ஆசிரியர் நியமனம் என்பது வெறுமனே குறிப்பிட்ட துறை சார்ந்தவர்களின் பதவி போராட்டமாக பார்க்காமல் எமது இளம் சமுதாயத்தின் வாழ்வியல் பிரச்சினையாக நோக்கப்படுதல் வேண்டும் .
அவ்வாறு கருதப்பட்டால் மட்டுமே இதற்கான நியமன அங்கிகாரத்தை இந்த அரசியல் சக்திகளால் பெற்றுதர குறைந்தபற்ச முயற்சிகலாவது மேற்கொள்ளபடும்.
அது மட்டுமல்லாமல் இது அவர்களில் தார்மீக கடமை என்பதையும் இந்த சமுதாயம் புரியவைக்க முன்வர வேண்டும்.
இல்லையென்றால் இஸ்லாத்தின் அடிபடைகளும் அரபு மொழி பரிற்சியம் இல்லாத( ஒரு சில தன்னார்வ மாற்று பாடத்திற்காக நியமிக்க பட்ட )ஆசிரியர்களால் இஸ்லாமிய பாடம் நடத்தப்படும் வேதனைகுரிய போதனை முறையும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
இச்செயற்பாடானது இந்த சமுககத்தின் சமயம் சார்ந்த அறிவியலை முறித்து விடுவதற்கு சமமாகும்.
இஸ்லாமிய ஆசிரியர் நியமன விடயத்தில் அதிகாரம் உள்ளவர்களும், அரசியல் வாதிகளும், சமூக நிறுவனங்களும் விரைந்து செயற்பட்டு உரியவர்களின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று இந்நியமன புறக்கணிப்பால் பாதிக்கபட்டவர்களுக்கும் ,மாணவர்களும் அவர்களின் நியாமான இந்த உரிமையை பெற்று கொடுக்க முன்வர வேண்டும் .
இந்த விடயத்தில் சமூக உணர்வோடு முஸ்லிம் அரசியல் வாதிகளின் செயற்பட முன்வருவார்களாக இருந்தால் அதற்கான சிறந்த சந்தர்மாக கருதப்படும் புதிய அரசின் 100 நாள் வேளை திட்டத்தில் இஸ்லாமிய ஆசிரியர் நியமனத்தை வென்றெடுக்க முடியும் இன்ஷா அல்லாஹ்.
இது அரசியலை தாண்டிய ஒரு சமூக கடமை என்பதை சம்மத்தப்பட்ட தரப்புகள் உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம். இல்லையெனில் இதற்கான பதிலை இறை சன்னிதானத்தில் சொல்ல முடியாத துற்பார்கிய நிலைக்கு முகம் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பதை வேதனையோடு சொல்லிவைக்க கடமைபட்டுள்ளோம் .


0 Comments