Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று மார்ச் - 10


1535 : பனா­மாவின் ஆய­ரான ஃபிறே டொமாஸ் டெ பேர்­லாங்கா என்­ப­வரின் தலை­மையில் வந்த கப்பல் பெரு­வுக்குச் செல்லும் வழியில் கலா­ப­கசுத் தீவு­களில் தரை­யி­றங்­கி­யது. 

1629 : இங்­கி­லாந்தின் முதலாம் சார்ள்ஸ் மன்­னனால் நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்த பதி­னொரு ஆண்­டு­க­ளுக்கு நாடா­ளு­மன்றம் இயங்­க­வில்லை. 

1735 : ரஷ்­யாவின் முதலாம் பவுல் மன்­ன­னுக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்­து­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்­தின்­படி ரஷ்யப் படைகள் அஸர்­பை­ஜானின் பக்கூ நகரில் இருந்து வெளி­யே­றினர். 

1801 : பிரித்­தா­னி­யாவில் முத­லா­வது மக்கள் தொகைக் கணக்­கெ­டுப்பு இடம்­பெற்­றது. 

1804 : லூசி­யானா மாநி­லத்தை அதி­கா­ர­பூர்­வ­மாக பிரான்­ஸிடம் இருந்து ஐக்­கிய
அமெ­ரிக்­கா­வுக்குக் கைய­ளிக்கும் நிகழ்ச்சி நடை­பெற்­றது. 

1814 : பிரான்ஸில் லாவோன் என்ற இடத்தில் நெப்­போ­லியன் போன­பார்ட்டின் படைகள் தோற்­க­டிக்­கப்­பட்­டன. 

1876 : பிரித்­தா­னிய விஞ்­ஞானி அலெக்­ஸாண்டர் கிரஹம் பெல் உலகின் முதல் தொலை­பேசி அழைப்பை மேற்­கொண்டார். “மிஸ்டர் வட்ஸன் இங்கே வாருங்கள். நான் உங்­களை பார்க்க வேண்டும்” என  அவர் தொலை­பே­சியில் கூறினார். 

1893 :  ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடி­யேற்ற நாடா­கி­யது. 

1902 :  தென் ஆபி­ரிக்­காவின் போவர்கள் பிரித்­தா­னியப் படை­க­ளு­ட­னான கடைசி சமரில் வெற்றி பெற்­றனர். 200 பிரித்­தா­னியப் படைகள் கைப்­பற்­றப்­பட்­டன.

 

1902 : அசையும் படம்­பி­டி ­க­ரு­வியை தோமஸ் எடிசன் கண்­டு­பி­டிக்­க­வில்லை என அமெ­ரிக்க  நீதி­மன்­ற­மொன்று தீர்ப்பு வழங்­கி­யது. 

1902 : துருக்­கியின் டோச்­சாங்­கிரி என்ற நகர் பூகம்­பத்­தினால் முற்­றாக அழிந்­தது. 

1906 : வடக்கு பிரான்ஸில் குரி­யேரெஸ் என்ற இடத்தில் இடம்­பெற்ற நிலக்­கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழி­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர். 

1922 : கிளர்ச்­சியைத் தூண்­டினார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்­தண்­டனை பெற்றார். ஆனாலும் இரண்­டாண்­டு­களில் சுக­வீனம் கார­ண­மாக விடு­த­லை­யானார். 

1933 : கலி­போர்­னி­யாவின் லோங் கடற்­க­ரையில் இடம்­பெற்ற பூகம்பம் கார­ண­மாக 120 பேர் கொல்­லப்­பட்­டனர். 

1952 : கியூ­பாவில் ஃபுல்­ஜென்­சியோ பட்­டீஸ்டா தலை­மையில் புரட்சி வெற்றி பெற்­றது. 

1959 : திபெத்தில் பத்­தாண்டு கால சீன ஆக்­கி­ர­மிப்பை எதிர்த்து லாசா நகரில்
நடத்­தப்­பட்ட போராட்டம் தோல்­வியில் முடிந்­தது. ஆயி­ரக்­க­ணக்­கானோர் சீன
இரா­ணு­வத்­தி­னரால் படு­கொலை செய்­யப்­பட்­டனர். 

1970 : வியட்நாம் போர்: அமெ­ரிக்க இரா­ணு­வத் தள­பதி ஏர்னெஸ்ட் மெடினா மீது
வியட்­நாமில் 1968 இல் நிகழ்த்­திய மை லாய் படு­கொ­லை­க­ளுக்­காக குற்றம்
சுமத்­தப்­பட்­டது.  

1977 : யுரேனஸ் கோளைச் சுற்றி வளை­யங்­களை வானி­ய­லா­ளர்கள் கண்­டு­பி­டித்­தனர். 

1990 : ஹெயிட்டியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஜனாதிபதி பதவியிலிருந்து புரொஸ்பர் அவ்ரில் அகற்றப்பட்டார். 

2006 : நாசாவினால் அனுப்பப்பட்ட மார்ஸ் ரெக்கனைசன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்தது.

Post a Comment

0 Comments