இரண்டரை வருடங்கள் கழிந்துள்ள நிலையில்
மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ள பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜுதீன்
விவகாரம் விபத்தில்லை கொலையெனும் முடிவுக்கு வந்துள்ள குற்றப்புலனாய்வுப்
பிரிவினர் விரைவில் கொலையாளியை அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
2012ம் ஆண்டு கார் விபத்தில் கிருலபனயில்
அவர் வபாத்தாகியிருந்த அதேவேளை அது தொடர்பான சந்தேகம் தொடர்ச்சியாக நிலவி
வந்திருந்தது. மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவை நோக்கியே சந்தேகப்
பார்வை தொடர்ந்தும் இருந்து வரும் நிலையிலேயே தற்போது இவ்விவகாரத்தை
மீண்டும் கையிலெடுத்துள்ள சி.ஐ.டி குறித்த சம்பவம் விபத்தில்லை கொலை எனவும்
கொலையாளி விரைவில் அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இச்சம்பவத்தையோ ஆதாரத்தையோ மூடி
மறைப்பதற்கு அரச ஊழியர்களோ அல்லது பொலிசாரோ உதவியாக இருந்திருந்தால்
அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments