நுரைச்சோலையில் அமைந்துள்ள முல்லையூர் கிராமத்தில் அல்லாஹ்வின் அருளால் அமைக்கப்பட்ட அழகிய ஜும்ஆப் பள்ளியானது 20/03/2015 வெள்ளிகிழமை ஜும்ஆத் தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது. இப் பள்ளிவாசலானது ஜம்இய்யதுல் ஸபாப் அமைப்பினால் சவூதிஅரேபிய நாட்டு தனவந்தர்களின் உதவியுடனும் மக்களின் ஒத்துழைப்புடனும் அமைக்கபட்டது .
1990 ம் ஆண்டு வடமாகாண முல்லைதீவு மாவட்டதில்இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஐந்து வருட துன்பகரமான அகதி முகாம் வாழ்கையின் பின்னர் 1995 ம் ஆண்டு நுரைச்சோலை கிராமத்தின் பொருளாதார அபிவிருத்தி சந்தைக்கு முன்னால் உள்ள கற்பாளி தோட்டப் பகுதியில் சொந்தமாக காணி வாங்கி குடியேறியிருந்தனர்.
சிறார்களின் குர்ஆன் பாடசாலை ஐவேளைத் தொழுகை போன்றவற்றை ஒரே ஒரு சிறிய கட்டிடத்தில் நாடாத் துவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டனர் இந்நிலையில் இப்பள்ளிவாசலின் அமைவு பயன்மிக்கதொன்றாகும் இப்பள்ளிவா சலினை அமைப்பதிற்கான ஒருபகுதி காணியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) யினால் வாங்கி அன்பளிப்பு செய்யப்பட்டது, இதே போல் மர்ஹூம் காசின்தம்பி சாஹுல்ஹமீது (அலியார் ) அவர்களின் பிள்ளைகளினால் ஒருபகுதி காணி அன்பளிப்பு செய்யப்பட்டது என்பதும் குறிப்படதக்கது.
K.M.பெளமி




0 Comments