உலகமே
உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின்
தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இஸ்லாமிய சேவை
புரிந்தமைக்காக டாக்டர் ஷாகிர் நாயக் அவர்களுக்கு சவூதி அரேபியாவின் உயரிய
விருதான மன்னர் பைசல் விருதை அரசர் சல்மான் வழங்கி கௌரவித்தார்.
24 கேரட் 200 கிராம் தங்க
பதக்கம், 7 லட்சத்தி 50 ஆயிரம் சவூதி ரியால் (இந்திய மதிப்பில் ஒரு கோடி 20
லட்சம்) மற்றும் அரபியில் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய டாக்டர் ஷாகிர் நாயக்.....
இஸ்லாம் மட்டுமே இறைவனால்
அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம், இந்த உலகுக்கு அமைதி வேண்டுமென்றால் அது
இஸ்லாத்தினால் மட்டுமே முடியும், இஸ்லாத்தினால் மட்டுமே அது சாத்தியம்
ஆகும் என்று தெரிவித்தார்.
மேலும் தாம் பெற்ற ரூ1.கோடி 20 லட்சம் ரூபாய் பணத்தை வக்பு சொத்துக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
0 Comments