Subscribe Us

header ads

குறைந்த பந்துகளில் 8 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் ஷாகித் அப்ரிடி

நேப்பியர்


பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி, இன்றைய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான 25-வது ‘லீக்’  போட்டியின் போது ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். குறைந்த பந்துகளை சந்தித்து 8 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்பதுதான் அந்த சாதனையாகும். இதன் மூலம் உலகின் முன்னணி அதிரடி வீரர் தான்தான் என்பதை அப்ரிடி பறைசாற்றியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக இன்று பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 339 ரன்களை குவித்தது. அணியின் மூத்த வீரர் ஷாகித் அப்ரிடி 7 பந்துகளில், 2 சிக்சர், 1 பவுண்டரி உதவியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த போட்டியில்  அப்ரிடி புது சாதனை படைத்துள்ளார். அதாவது இன்று அவர் 8 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இந்த ரன்களை கடக்க அவர் இதுவரை 6857 பந்துகளை சந்தித்துள்ளார். அதன் அடிப்படையில், அப்ரிடியின் ஸ்டிரைக் ரேட் 116.86 ஆக உள்ளது.

இந்தியாவின் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் 7658 பந்துகளை சந்தித்து 8 ஆயிரம் ரன்களை கடந்து பெற்றிருந்த அதிரடி சாதனையை, அப்ரிடி முறியடித்துள்ளார். சேவாக்கின் ஸ்டிரைக் ரேட் 104.33 ரன்களாகும். அதாவது 100 பந்துகளை சந்தித்தால் சேவாக் 104 ரன்களை எடுப்பார் என்பது சராசரி. நூற்றுக்கு மேலே ஸ்டிரைக் ரேட் வைத்து 8 ஆயிரம் ரன்களை கடந்தது இவ்விரு வீரர்களும் மட்டுமே

கில்கிறிஸ்ட் 8310 பந்துகளை சந்தித்துதான், 8 ஆயிரம் ரன்களை கட்ந்து உள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 96.94 ஆகும். ஜெயசூர்யா 8920 பந்துகளிலும், இந்திய கேப்டன் டோனி, 8950 பந்துகளிலும் 8 ஆயிரம் ரன் என்ற சாதனையை எட்டினர்.

கெய்ல், கிப்ஸ் இந்த பட்டியலில் 84.82 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் கெய்ல் 9-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் கிப்ஸ் 83.26 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 10வது இடத்திலும் உள்ளனர்.

ஆனால் பிற பேட்ஸ்மேன்களை ஒப்பிட்டால் அப்ரிடியின் ரன் சராசரி குறைவேயாகும். திரடியாக இரண்டு ஷாட்டுகளை அடித்தோமா.. அவுட் ஆகி போனோமா என்பதுதான் அப்ரிடி வாடிக்கை. எனவேதான் அவரது ரன் குவிப்பு சராசரி குறைவாக உள்ளது. அந்த வகையில் ஷேவாக் ஒரு படி மேல்தான். ஏனெனில், அவர் இந்தியாவின் மேட்ச் வின்னராகும்.

இன்றைய  ஆட்டத்தின் போது 200-வது சிக்சர் எடுக்கப்பட்டது. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 196 சிக்சர்கள் எடுக்கப்பட்டன. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சோயப் மசூத் அடித்த சிக்சர் மூலம் 200-வது சிக்சர் அடிக்கப்பட்டது.  இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ்கெய்ல் அதிகபட்சமாக 17 சிக்சர் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக டிவில்லியர்ஸ், மில்லர் (தென் ஆப்பிக்கா) மேக்குல்லம் (நியூசிலாந்து) தலா 11 சிக்சர்கள் அடித்துள்ளார்கள்.
* உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு இது 2-வது மிகப்பெரிய ஸ்கோர் ஆகும் 2007 ஆம் ஆண்டி ஜிம்பாப்வேக்கு எதிராக கிங்ஸ்டன் மைதானத்தில் 349 ரன்கள் எடுத்து இருந்தது.


நன்றி:தினத்தந்தி

Post a Comment

0 Comments