Subscribe Us

header ads

"குரான் ஹதீஸ்களின் ஆபாசங்கள்" என்ற முகநூல் பக்கத்தை REPORT செய்யுங்கள்.

 -MRM. MUJAS-

காய்த்த மரத்துக்குத் தான் கல்லடியும் பொல்லடியும் என்று சொல்வா்கள். அந்த வகையில் இஸ்லாம் மார்க்கமானது கல்லடியும், பொல்லடியும் வாங்கிங் கொண்டு தான் இருக்கின்றது. இஸ்லாத்தின் வளா்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாத நாசகார சக்திகள் இஸ்லாத்தை எந்த வகையில் எல்லாம் கொச்சைப் படுத்த முடியுமோ அந்த வகையில் எல்லாம் கொச்சைப் படுத்தி வருவதைக் காணமுடிகின்றது. 

இன்றைய நாட்களில் எதிரியை நேரடியாக முன் நின்று எதிர்க்க முடியாதவா்கள் போராட முன்னெடுக்கும் ஒரு சாதனம் தான் FACEBOOK. தனது சொந்த பெயரல்ல வேறு பெயா்களில் முகநூல் கணக்குகளைத் திறந்து வைத்துக் கொண்டு எதிர்ப்பதைக் காணமுடியும். அதேபோன்று இஸ்லாத்தைக் கொச்சை படுத்தவும் இன்று எதிரிகள் போலி முகநூல் கணக்கு களையும், முகநூல் பக்கங்களையும் ஆரம்பித்து அவற்றை வழிநடத்துவதை காணலாம். அந்த வழிமுறையில் தான் இஸ்லாத்தின் எதிரிகளால் வழி நடாத்தப்படும் ஒரு முகநூல் பக்கம் தான் குரான் ஹதீஸ்களின் ஆபாசங்கள் என்பதாகும். முஸ்லிம்களால் உயிரின் மேலாக மதிக்கப்படுகின்ற முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களை கேவலப் படுத்தியும், அவா்களது மனைவி மார்களை இழித்துரைத்தும் இஸ்லாத்தின் மூலதாரமான குா்ஆன், ஹதீஸ்களை அவமதித்தும் செயற்படும் ஒரு பக்கமே குரான் ஹதீஸ்களின் ஆபாசங்கள் என்ற முகநூல் பக்கமாகும். இது போன்ற பக்கங்களை REPORT செய்வதன் மூலம் முகநூலிம் இருந்து அகற்ற முடியும். ஆகவே முஸ்லிம்களாகிய எமது சகோதரா்களிடம் கேட்டுக் கொள்வது கீழே படங்கள் மூலம் காட்டப்பட்டுள்ளவாறு REPORT செய்து அவற்றை FACEBOOK யில் இருந்து நீக்க உதவும் படி கேட்டுக் கொள்கின்றோம். மேலும் எமது சகோதரா்களுக்கு முக்கியமான வேண்டுகோள். எந்ந ஒரு முகநூல் பக்கமாக இருந்தாலும் LIKE செய்வதற்கு முன்னால் அந்த பக்கத்தை முழுமையாக வாசித்து விட்டு LIKE செய்யும்.








 

Post a Comment

0 Comments