பைஷல் இஸ்மாயில் -
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ள மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாடும் நிகழ்வு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தலைமையில் இன்று மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் பூனாகலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சர்களான வீ.இராதாகிருஸ்ணன், கே.வேலாயுதன், ஊவா மாகாணசபை முதலமைச்சர் ஹரின் பிரனாந்து உள்ளிட்ட மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் தோட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அண்மையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட சுமார் 77 குடும்பங்களுக்கு 1.2 மில்லியன் ரூபா செலவில் இந்;த வீட்டுத்திட்டம் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்டவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




























0 Comments