சீனாவில் லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 7 டொன் கெளுத்தி மீன்கள் வீதியில் விழுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் மீன்களை அள்ளிச்செல்ல அலைமோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதுள்ளதோடு சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
சீனாவின் குய்ழோ மாகாணத்தின் கைலி நெடுஞ்சாலை வழியாக மீன்களை ஏற்றிச்சென்ற லொரி ஒன்று சாலைத்தடையில் ஏறி இறங்கியபோது பின்புறக் கதவு தானாக திறந்து கொண்டது.
இனதால் உள்ளே இருந்த சுமார் 7 ஆயிரம் கிலோ கெளுத்தி மீன்கள் வீதி முழுவதும் கொட்டி சிதறிய விபரம், சில நூறு அடிகள் சென்ற பின்னரே அந்த லொரியின் சாரதிக்கு தெரியவந்தது.
அதற்குள் வீதியில் குவிந்து கிடந்த மீன்களை அப் பகுதியில் இருந்த பிரதேச மக்கள் வாளிகளில் அள்ளிச் சென்றுள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் அந்த மீன்களை பொறுக்கி எடுத்து, வீதியோரமாக குவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவி வருகின்றது.






0 Comments