Subscribe Us

header ads

மனிதர்களைவிட 6 மடங்கு அதிக எண்ணிக்கையில் பூனைகளைக் கொண்ட தீவு


ஜப்­பா­னி­லுள்ள தீவொன்றில் மனி­தர்­க­ளை­விட அதிக எண்­ணிக்­கையில் பூனைகள் காணப்­ப­டு­கின்­றன. ஓஷிமா எனும் இத்­தீவு ஜப்­பானின் எஹிமே மாகா­ணத்­தி­லி­ருந்து 30 நிமிட படகுப் பிர­யாணத் தூரத்தில் உள்­ளது. 

1945 ஆம் ஆண்டு சுமார் 900 பேர் அங்கு வசித்­தனர். 

பெரும்­பா­லானோர் தொழில்­தேடி நக­ரங்­க­ளுக்குச் சென்­று­விட வயோ­தி­பர்கள் 22 பேர் மாத்­திரம் அத்­தீவில் எஞ்­சி­யுள்­ளனர். ஆனால் அங்­குள்ள பூனை­களின் எண்­ணிக்கை 120 ஆகும். 

மீன­வர்­களின் பட­கு­களை சேத­மாக்கும் எலி­களின் தொல்­லை­யி­லி­ருந்து
தப்­பு­வ­தற்­காக அத்­தீ­வுக்கு பூனை கள் முதலில் கொண்­டு­வ­ரப்­பட்­டன. 

ஆனால் கடந்த 50 வரு­டங்­களில் மனி­தர்­களின் எண்­ணிக்கை குறைந்­து­ செல்ல பூனை­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­து­விட்­டது. 

இதனால் தற்­போது இத்தீவில் ஒரு நபருக்கு 6 பூனைகள் விகிதத்தில் காணப்படுகின்றன.

Post a Comment

0 Comments