Subscribe Us

மௌனத்தின் சப்தம்


சப்தமாய் ஓர் மௌனமும்
மௌனமாய் ஓர் சப்தமும்
என் காதுகளில் விழுகிறது
வாயிருந்தும் ஊமையாய்
காதிருந்தும் செவிடனாய்
நான் ஆகிக் கொண்டிருக்கிறேன்

வயதறியாத வாலிபம்
கட்டுக்கடங்கா வீர ஓட்டம்
கால வேகத்தில் தன்னையறியா
இளைஞர் யுவதிகளின் இதயங்கள்
சப்தமிட்டே மௌனித்துப் போயின

விவாகரத்தின் விழிம்பில்
ஓர் ஜோடியின் வாழ்வு
சிற்றின்ப சுகம் தேடி
தலை தெறிக்க ஓடி வந்தவர்கள்
வாழத் தெரியா வாழ்க்கை
மௌனித்துப் போனது

கைக் கூலி கால்க் கூலி
ஏதும் வேண்டாம் வீடு போதும்
திருமணப் பேரம் பேசலில்
விலை போகாத பெணின்
கண்களிரண்டும் அழுததழுதே
மௌமாய் சப்தமிடுகிறது

குடிகாரக் கணவன்
சொல்லுக்கடங்கா பிள்ளை
திக்கித் திணறியே வாழும்
அவள் வாழ்க்கை
சப்தமாய் மௌனிக்கிறது

கள்ளக் காதலன்
சந்தேக வாழ்க்கை
வெறுத்துப் போன கணவன்
இதயம் வெடித்தே
மௌனமாய் சப்தமிடுகிறது.

07.03.2015

Post a Comment

0 Comments