Subscribe Us

header ads

யாழ். ஏழாலை பாடசாலை மாணவர்கள் 26 பேர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் – ஏழாலை ஸ்ரீமுருகன் பாடசாலையில் கல்விபயிலும் 26 மாணவர்கள் மயக்கமுற்ற நிலையில் இன்று வியாழக்கிழமை காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த மாணவர்கள் அனைவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் காவற்துறையினர் தெரிவித்தனர்.
 
குறித்த மாணவர்கள் அருந்திய தண்ணீரில் ஏற்பட்ட நச்சுத் தன்மை காரணமாக மயக்கமடைந்துள்ளனர்.
 
இதனையடுத்து இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மாணவர்கள் அருந்துவதற்காகப் பயன்படுத்தப்படும் குடிநீர் தாங்கியில் விஷமிகள் சிலரால் நச்சுத் தன்மை கலக்கப்பட்டுள்ளதாக ஏழாலை ஸ்ரீமுருகன் பாடசாலையின் அதிபர் சந்திரகுமார் ஐ.பி.சி தமிழ் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.




Post a Comment

0 Comments