Subscribe Us

header ads

மஹிந்த ஆற்றிய சேவைகளை எவராலும் மறந்து விட முடியாது: டி.எம். ஜயரட்ன


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சேவைகளை எவராலும் மறந்து விட முடியாது என முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை எவராலும் மறக்க முடியாது.

ஜனாதிபதியாக சேவையாற்றிய காலத்தில் முழு நாட்டுக்கும் பல்வேறு சேவைகளை வழங்கியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முழு நாட்டையும் அலங்காரப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார். இந்த விடயங்களை எவரும் மறந்து விடக் கூடாது.

குறிப்பாக பயங்கரவாதத்தை பூண்டோடு இல்லாதொழிப்பதற்கு இவர்கள் இருவரும் ஆற்றிய சேவை அளப்பரியது என ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments