Subscribe Us

header ads

100 கோடி பேர் கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்த அப்ளிகேஷன்..!!


பிரபல குறுந்தகவல் அனுப்பும் செயலியான வாட்ஸ்ஆப் ஆன்டிராய்டு இயங்குதளத்தில், 100 கோடி முறை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை வாட்ஸ்ஆப் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜான் கோம் தெரிவித்தார்.

'வாட்ஸ்ஆப் செயலி 100 கோடி முறை ஆன்டிராய்டில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள தகவலை ஜான் ட்விட்டர் மூலம் உறுதி படுத்தியதோடு வாட்ஸ்ஆப் ஆன்டிராய்டு குழுவினரை வெகுவாக பாராட்டினார்.

ப்ரியான் மற்றும் நான்கு பேர் அடங்கிய வாட்ஸ்ஆப் ஆன்டிராய்டு குழுவினர் இதை சாத்தியமாக்கியுள்ளனர். சிறிய குழு ஆனாலும் பெரிய விளைவினை ஏற்படுத்தியுள்ளனர்', என ஜான் தன் ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.

வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்தாண்டு ஜனவரி மாதம் 700 மில்லியன் பயனாளிகளை பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதோடு வாட்ஸ்ஆப் செயலியில் வாய்ஸ் காலிங் அம்சம் சேர்க்கப்படுவது இந்த எண்ணிக்கையை அதிகமாக்கும் என்று நம்பலாம்.

இதுவரை ஜிமெயில், கூகுள் மேப்ஸ், கூகுள் சர்ச், யூட்யூப், பேஸ்புக் மற்றும் ஆங்ரி பேர்ட்ஸ் செயலிகளை தொடர்ந்து வாட்ஸ்ஆப் 100 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது. என குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments