அனைத்து முஸ்லீம்களும் இந்துக்களாக பிறந்தவர்கள் என நான் கூறவில்லை என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி மசூதிகள் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டிடங்களே என்றும் அனைத்து முஸ்லீம்களும் இந்துக்களாக பிறந்தவர்கள் எனவும் பேசியுள்ளார்.
ஆனால் தற்போது இதை மறுத்து சாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது, அனைத்து முஸ்லீம்களும் இந்துக்கள் என்று நான் கூறியதாக பொய்யை பரப்புகிறார்கள். ராவணன் தலித் என்பது போன்று என தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்திய மண்ணில் பிறந்த அனைத்து முஸ்லீம்களும் இந்துக்கள் தான். அதை அவர்களின் மரபணுவை சோதனை செய்து நிரூபிக்க முடியும் என கூறிய சாமி அதை மீண்டும் மறுத்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments