(எஸ்.றொசேரியன் லெம்பேட்)
இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி
மன்னாருக்கு செல்லவுள்ள நிலையில் சுமார் 26 வருடங்களுக்கு பின்பு
மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
1990 ஆம் ஆண்டுக்குப் பின்னார் நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக
தெற்கிலிருந்து ரயில் சேவைகள் இடை நிறுத்தப்பட்டது.
யுத்தத்தின் காரணமாக ரயில் பாதைகள் பாதைகள், ரயில் நிலையங்களும்
சேதமடைந்திருந்தன. இதன் காரணமாக -சுமார் 26 வருட காலமாக மதவாச்சியிலிருந்து மன்னாருக்கான ரயில் சேவைகள் தடைப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மதவாச்சியில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் ரயில் நிலையம் வரையிலான பாதைகள் மற்றும் தரிப்பிடங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
திருக்கேதீஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து தலைமன்னார் புகையிரத தரிப்பிடம் வரையிலான வேலைத்திட்டங்கள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



0 Comments