Subscribe Us

header ads

தவ்ஹீத் ஜமாத் (SLTJ) நடத்தும் டெங்கு நோய் விழிப்புணர்வு வாரம்


நாட்டின் பல பகுதிகளிலும் டெங்கு நோய் பரவி வருவதுடன், டெங்கு பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஆங்காங்கே ஏற்பட்டு வருவதை பத்திரிக்கைகள் மற்றும் செய்திச் சேவைகள் மூலம் நாம் அறிந்து வருகின்றோம்.
நுளம்பு மூலம் ஏற்படும் இந்நோயின் கடுமை மரணத்தை உண்டாக்கும் அளவு பயங்கரமானதாகும்.
சுற்றுச் சூழல் மாசடைதல் மூலம் தேங்கி நிற்கும் தண்ணீர்களில் உருவாகும் டெங்கு நுளம்புகள் மூலமே இந்நோய் ஏற்படுகின்றது.
டெங்கு நோய் ஏற்படாமல் தடுக்கவும், டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்கவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இம்மாதம் 21 தொடக்கம் 28 வரையான ஒரு வார காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது.
ஜமாத்தின் கிளைகள் டெங்கு விழிப்புணர்வு பற்றிய அணைத்து விதமான பிரச்சாரங்கள் செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு இவ்வறிவித்தல் மூலம் வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்.
டெங்கு விழிப்புணர்வு தொடர்பில் கிளைகள் செய்ய வேண்டிய பிரச்சாரங்கள் மற்றும் செயல்பாடுகள்.
✔ விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டுதல். (சிங்களம், தமிழ் மொழிகளில்)
✔ விழிப்புணர்வு நோட்டிஸ்களை வெளியிடுதல். (சிங்களம், தமிழ் மொழிகளில்)
✔ விழிப்புணர்வு வீடியோ காட்சிகளை தெருமுனை பிரச்சாரம் மூலம் காட்சிப் படுத்தல். (சிங்களம், தமிழ் மொழிகளில்)
✔ டெங்கு நோய் தொடர்பாகவும், இஸ்லாம் கூறும் சுகவாழ்வு தொடர்பாகவும் கண்காட்சிகளை நடத்துதல்.
✔ வைத்தியசாலைகள், பாடசாலைகள், பொதுக் கழிப்பிடங்கள், பஸ் தரிப்பிடங்கள், பாதைகள், பாதையோரங்களில் நீர் தேங்கி நிற்கும் பகுதிகள், பொதுக் கினறுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடல் வேண்டும்.
✔ ஆட்டோ பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு தகவல்களை வெளியிடல்.
✔ டெங்கு விழிப்புணர்வு உள்ளரங்க நிகழ்ச்சிகள் கருத்தங்கங்கள் நடத்துதல் – தகுதிவாய்ந்த அதிகாரிகளின், சுகாதார அத்தியட்சகர்களின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
✦ மேலும் கிளைகள் இனங்காணும் மேலதிக செயல்பாடுகளில் ஈடுபடவும்.
➛ குறிப்பு : டெங்கு பற்றிய விழிப்புணர்வு நோட்டிஸ், போஸ்டர் மாதிரிகள் நாளை வெளியிடப்படும் – இன்ஷா அல்லாஹ்.

Post a Comment

0 Comments