Subscribe Us

காத்தான்குடியில் தீவிரமாக பரவும் டெங்கு நோய் (PHOTOS)


காத்தான்குடி நகர சபை பிரிவில் நேற்று மாலை டெங்கு பரிசோதனை இடம்பெற்றது.காத்தான்குடி ஆறாம் குறிச்சிப்பகுதியில் இந்த டெங்கு பரிசோதனை மற்றும் டெங்கு விழிப்புனர்வு வேலைத்திட்டம் என்பன இடம் பெற்றன.


காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் உதவியுடன் காத்தான்குடி அஸ்ஸ{ப்பான் நலன்புரி அமைப்பு மற்றும் றப்பானிய்யஹ் இளைஞர் கழகம் என்பன இணைந்து இந்த டெங்கு பரிசோதனை நடவடிக்கையை மேற் கொண்டன. 


டாக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையில் காத்தான்குடி பொதுச் சுகாதா பரிசசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ் மற்றும் அஸ்ஸ{ப்பான் நலன்புரி அமைப்பு மற்றும் றப்பானிய்யஹ் இளைஞர் கழக உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று இந்த டெங்கு பரிசோதனையில் ஈடுபட்டதுடன் வீட்டுரிமையாளர்களுக்கு டெங்கு விழிப்புனர்வை வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். 


இதன் போது குர்ஆன் மதரசாக்கள் பாலர் பாடசாலைகள் பிரத்தியேக கல்வி நிலையங்கள் என்பவைகளும் டெங்கு பரிசோதனை செய்யப்பட்டன. 


காத்தான்குடி நகர சபை பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று வரை 75பேருக்கு டெங்கு டெங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார் 


கடந்த வாரத்தில் காத்தான்குடி நகர சபை பிரிவில் இரு சிறுமி உட்பட இருவர் டெங்கினால் உயிரிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.











Post a Comment

0 Comments