(ஏ.எஸ்எ.ம்.ஜாவித்)
கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டமை தொடர்பாகவும் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் தளம்பல் நிலைமைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு ஒன்று அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான றவுப் ஹக்கீம் தலைமையில் இன்று (08) காலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், அமைச்சர் ஹஸன் அலி மற்றம் மாகாண சபை உறுப்பினர்கள், மீண்டும் இணைந்து கொண்ட கட்சியில் இருந்து விலகிய மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.



0 Comments